சந்திம ஜெயவிக்ரம – வேர்டுசா நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர்

ஆனந்தா கல்லூரியின் மாணவனாக 2007ம் ஆண்டு எனது உயர் தரக் கல்வியை முடித்துக் கொண்ட பின், ஸ்லிட் நிறுவனத்தின் தகவல் தொழிநுட்ப பட்டமானி கற்கை நெறி பற்றி எனது நண்பன் மூலமாக அறிந்து கொண்டேன். வாழ்வில் முதல் முறையாக கற்க வேண்டும் எனும் ஆர்வம் தோன்றியது.

அதன் விளைவாக, 2008 ம் ஆண்டு, வணிகத்துறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஸ்லிட் நிறுவனத்தில் இணைந்து கொண்டேன்.

மென்பொருள் பொறியியலாளராக வேண்டும் எனும் ஆவல் காரணமாக, அதிகளவு நேரத்தினை செலவழித்து குறியீட்டு முறைகளை மிகவும் தீவிரமாகக் கற்றுக் கொண்டேன். சன் நிறுவன உத்தரவாதம் பெற்ற ஜாவா குறியீட்டு அங்கீகாரத்தினை, விடுமுறைக் காலத்திலேயே பெற்றுக் கொண்டேன்.

எமது கற்கைநெறியின் இரண்டாம் ஆண்டில் கற்கும் காலப்பகுதியில், இலங்கையின் முன்னணி மென்பொருள் நிறுவனமான வேர்டுசா நிறுவனம், தனது புலமைப் பரிசில் திட்டம் பற்றி ஸ்லிட் நிறுவனத்திற்கு அறிவித்தது.

சில மாதப் பயிற்சிக்குப் பின்னர், வேர்டுசா நிறுவனமானது எனது கற்கை நெறித் தொகுதி மாணவர்களுக்கு, தனது திட்ட வேலையினைக் கையளித்தது. புதிய பொறுப்புக்களுடன் வாழ்க்கை மிகவும் சவாலாக மாறியது.
குறித்த துறையில் அனுபவப் பயிற்சியினையும் பெற்றுக் கொண்டமை, புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும், 4.0 அளவு சராசரி தரப் புள்ளியினையும் பெற்று, ஸ்லிட் நிறுவனத்தின் புலமைப் பரிசிலையும் பெற வழி வகுத்தது.

2௦1௦ம் ஆண்டு இறுதியாண்டுக் கற்கை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், வேர்டுசா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் உப பிரிவான உலகளாவிய தொழிநுட்ப அலுவலகத்தில் பணிபுரிவதற்காகத் தெரிவு செய்யப்பட்டேன்.
மிகப் பெரிய முயற்சிக்குப் பின் இறுதியாக, முதல் வகுப்புப் பட்டத்தினை ஸ்லிட் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், வேர்டுசா நிறுவனத்தின் பொறியியலாளராக பதவியுயர்வு பெற்றதுடன் புலமைப் பரிசிலையும் பெற்றுக் கொண்டேன்.

மேலும் வாசிக்க

ஜாலிய உடகெதர (MVP/ தொழினுட்ப முன்னணியாளர்)

கண்டி கிங்க்ஸ்வூட் கல்லூரியில் உயர் தர கணிதப் பிரிவில் கல்வி கற்ற எனது பெறுபேறுகள் நன்றாக அமையவில்லை.
அதன் பின், 2௦௦6ம் ஆண்டு ஸ்லிட் நிறுவனத்தின் பட்டமானிக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமையை பத்திரிகையில் வாசித்தேன்

மத்திய தர குடும்பத்தைச் சார்ந்த எனது பெற்றோர் அக்கற்கை நெறியில் சேர விண்ணப்பிக்குமாறு என்னை ஊக்குவித்ததன் விளைவாக, அனுமதி மட்டப் பரீட்சையில் சித்தி பெற்றேன். ஆரம்பத்தில் அனைத்துமே மிகவும் புதிதாக அமைந்தாலும், எனது கல்வியினை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு பட்டதினயும் பெற்றுக் கொண்டேன். ஸ்லிட் நிறுவனத்தின் கல்வியை முடித்து ஒரு வாரம் கடந்த நிலையில், இலங்கையின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றில் பயிலுனராக இணையும் வாய்ப்புக் கிட்டியது.

ஸ்லிட் நிறுவனத்தில் இணைந்து கொள்ளாது விட்டிருந்தால், எனது தற்போதைய நிலை எவ்வாறு அமைந்திருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

ஸ்லிட் நிறுவனமும், அதன் விரிவுரையாளர்களும் வழங்கிய உதவியின் காரணமாகவே நான் இன்று எனது தற்போதைய நிலையை அடைந்துள்ளேன் என்பதில் எதுவிதமான சந்தேகமுமில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுடையவன்.

மேலும் வாசிக்க

“பன்முகத்தன்மையைக் கண்டு பயப்படாது, அதனைத் தழுவிக் கொள்ளுங்கள்.” – எனது பயணத்தில் மறைந்துள்ள உண்மை. – சசங்க குணதிலக

ஸ்லிட் நிறுவனத்தில் பயின்ற காலப்பகுதியானது, கல்வியை மற்றும் சார்ந்த வகுப்பறைக் கல்வியாக அமையவில்லை.

ஸ்லிட் நிலையத்தின் எங்கள் வாழ்க்கையானது, உயிரோட்டமுள்ளதும், வாழ்க்கையின் முழு ஈர்ப்பையும் பயன்படுத்தி இயக்கப்பட்டதுமாகும்.

தனிப்பட்ட முறையில், ஸ்லிட் கம்பியூட்டிங்கின் ஊடாடும் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைவர் ஆகிய இரு பதவிகளையும் நான் வகித்துள்ளேன்.
எங்கள் காலத்திலேயே ஸ்லிட் நிறுவனத்தின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றினை நாம் ஏற்பாடு செய்திருந்தோம். முழுமையாக, சிறந்த பயனுள்ள மற்றும் மறக்கமுடியாத மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஸ்லிட் நிறுவனத்தின் காலத்துக்கு ஏற்ற அறிவு, நம்பிக்கை மற்றும் பாரிய நினைவுகள்

போன்றவற்றை, எனது எதிர்காலத்தினை எதிர்கொள்ள என்னுடன் கொண்டு வெளியேறினேன்.
இன்று, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஒரு உதவி இயக்குனராக கடமை புரிவதுடன், இலங்கை சுற்றுலா சார்ந்த சமூக ஊடக பிரச்சாரங்கள் மற்றும் ஏனைய பல பல்லூடகப் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றேன்.
வாழ்கையில் இந்த நிலையை அடைய, வாய்ப்புக்கள் பல வழங்கிய ஸ்லிட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

மேலும் வாசிக்க

இஷார விக்ரமசிங்க

ஸ்லிட் நிறுவனத்தில் நான் எனது பட்டமானியை பெற்றுக் கொண்டேன்.
பெட்போர்ட்ஷியர் பல்கலைக்கழகத்தின் கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் பட்டமானது, எனது எதிர்காலத் துறையுடன் மிகவும் சீராகப் பொருந்தும் ஒன்றாகும்.

ஒரு மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்த என்னைப் போன்ற பலருக்கு, ஸ்லிட் நிறுவனத்தின் பகுதி நேரக் கற்கை நெறியானது மிகவும் உதவியாக அமைந்தது.
ஸ்லிட் நிறுவனத்தில் கல்வி பயிலும் அனைவருக்கும் மிகவும் சிறந்த பயனாகக் கிடைக்கும் மெய்யான காரணி எதுவென்றால், ஸ்லிட்டின் பாடத்திட்டங்கள் எதுவுமே காலம் கடந்தவையல்ல என்பதாகும்.

விரிவுரையாளர்கள் அனைவருமே தற்காலப்படுத்தப்பட்ட நவீன கற்கை வளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பகுதி நேர கல்வியில் ஈடுபட்டிருந்தாலும், எவ்வகையிலும் அது என்னைக் குறைவாக கருத ஏதுவாயிருக்கவில்லை.

புதியவர்களைச் சந்திக்கவும், நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும் கூடியதாக அமைந்தமை, ஸ்லிட் கம்பியூடிங் நிறுவனத்தின் ‘வாழ்க்கை முறை’ எனக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமானதாக அமையும்.

குறித்த சர்வதேசக் கற்கை நெறியின் சிறந்த மாணவனாக வர முடிந்தமை, எனது தொழில்த் துறையில் மிகவும் பயனாக அமைந்தது. தற்போது, நான் நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் சர்வதேச நிறுவனமொன்றில் பணியாற்றி வருகின்றேன் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

மேலும் வாசிக்க

திலீன விஜேவர்தன

23 வயதான நான் ஐக்கிய இராச்சியத்தின் கீல் பல்கலைக்கழக முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையில் எல்லாம் ஒரு கேள்வியுடன் தொடங்கியது. எனது நிலைக்கு நானே காரணம் அன்றி வேறு யாரும் இல்லை என்று உணர்ந்தேன். அந்த கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்னை ஒரு வெற்றிபெற்றவனாகவும், வெற்றிகரமான எதிர்காலத்திற்கான ஒரு உயர்ந்த கல்வியை அடைய வேண்டும் என்பதும் எனது இலக்காக அமைந்தது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக வெற்றி பெற, என் கனவுகளைத் தொடர, மிகச் சிறந்த இடமாக உணர்த்தப்பட்ட இடமே ஸ்லிட் நிறுவனமாகும். தகவல் தொழிநுட்பத்தில் இளமானிப் பட்டக் கற்கையை தொடங்குவதற்கு முன் நான் உயர் தரப் பரீட்சையில் அமர்ந்தேன். 2013 ஆம் ஆண்டில் மாணவர் ஆலோசகராக எச்சீவர்ஸ் நிறுவனத்தில் என் வாழ்க்கையைத் தொடங்கி 2015 இல் தகவல் தொழிநுட்ப மற்றும் செயல்திறன் நிர்வாக உத்தியோகத்தராக உயர்வடைந்தேன்.

தற்போது இம்பீரியல் கல்லூரியில், வணிக அபிவிருத்தி முகாமையாளராகப் பணிபுரிவதுடன், திட்ட முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளேன். உங்களுக்காக சிறந்தது என்ன என்பதை தீர்மானிக்க நீங்கள் மிகவும் தாமதமாகி விடாது, வாழ்க்கையின் தோல்விகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் விதி என்னவாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் போது, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க போதுமான புத்திசாலித்தனம் இருந்தால், உங்கள் மீண்டும் எழுந்து நிற்க முடியும். யாராலும் உங்களை கீழே வீழ்த்த முடியாது.
என் கருத்துப்படி, உணவிற்காக யாரும் இல்லாத ஒரு மேசை மீது ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு போன்ற வாய்ப்புகள் உள்ளன. உங்கள் விருப்பப்படி சிறந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். என் பார்வையில் ஒரு மனிதனின் வெற்றியானது, தனக்கே சேவையாற்றத் தூண்டும் தொடர்ச்சியான பேரார்வத்திலேயே தங்கியுள்ளது.

மேலும் வாசிக்க

சீன் லீ – திட்ட ஒருங்கிணைப்பாளர் – சோன் 24×7

கொழும்பு பரி. ஜோசப் கல்லூரியில் உயர் தரக் கல்வியினை முடித்த பின், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிபுணராக வேண்டும் என்பதே எனது இலக்காக அமைந்தது. ஸ்லிட் நிறுவனத்தின் பட்டமானி கற்கைநெறியானது என்னை மிகவும் கவர்ந்த நிலையில், நான் எனது கற்கையை அங்கே தொடர்ந்ததுடன், ஸ்லிட்டின் நெகிழ்வான தன்மையானது, எனது முழு நேரத் தொழிலையும் தொடர்ந்து கொண்டே, பகுதி நேரமாக எனது கற்கையினையும் தொடர முடிந்தமை எனது இலக்கை நோக்கிச் செல்ல மிகவும் உறுதுணையாக அமைந்தது.

தொழிற் துறைக்குத் தேவையான முழுமையான அறிவினைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறான கற்கை அமைப்பு மற்றும் விரிவுரையாளர்களின் சிறந்த அறிவூட்டல் மற்றும் கற்றல் தொடர்பில் அவர்கள் வழங்கும் உதவியானது நிச்சயமாக குறிப்பிட்டுக் கூறத்தக்க விடயமாகும். கோட்பாட்டுக் கல்வியுடன் கூடிய நடைமுறைக் கல்வி முறையானது தொழிற் துறையில் மிகவும் சிறந்து விளங்க பாரிய அளவில் துணை புரிகின்றது.

கல்வி மட்டுமன்றி, கல்வி சார் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்டதன் மூலம் பல நண்பர்களையும், சிறந்த ஞாபகங்களையும் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அமெரிக்காவின் கலிபோனியாவை தலைமையகமாகக் கொண்ட, உலக தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சேவைகளின் முன்னணி வழங்குனரான சோன் 24×7 நிறுவனத்தில் தகவல் தொழிநுட்ப திட்ட முகாமைத்துவத் துறையில் நான் தற்போது பணியாற்றி வருகிறேன்.

மேலும் வாசிக்க

யஷோதா டி சில்வா – வேர்துசா போலாரிஸ் நிறுவனத்தில் இணை ஆலோசகர்

பிரஸ்பிட்டேரியன் தேசிய பாடசாலையில் உயர் தரம் கற்று வெளியான நான் ஸ்லிட் நிறுவனத்தில் இணைந்து 2013ம் ஆண்டு தகவல் தொழிநுட்பத்தில் எனது பட்டத்தினைப் பெற்றுக் கொண்டேன்.

நான் தற்போது வேர்துசா போலாரிஸ் நிறுவனத்தில் ஒரு துணை ஆலோசகராக பணியாற்றி வருகிறேன்.

நண்பர் ஒருவர் மூலமாகவே நான் ஸ்லிட் பற்றி அறிந்து கொண்டேன். அங்கு கற்ற 3 ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மிகவும் அற்புதமான காலம் எனக் குறிப்பிடலாம். அற்புதமான நண்பர்கள் கிடைத்தனர். ஸ்லிட்டின் திறந்த தினம் போன்ற பல்வேறு நிகழ்வுகள், புதிய யோசனைகளை உருவாக்கவும், திறமைக் காட்சிப்படுத்தல் நிகழ்வு, கிரிக்கெட் போட்டி மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டம் போன்ற ஏனைய நிகழ்வுகள் பல குழுவில் இணைய உதவியது. குழு வேலை, ஒத்துழைப்பு போன்றவை வாழ்க்கையை கற்றுக்கொள்ள எனக்கு உதவியது. இது வேடிக்கையாகவும் அதே நேரத்தில் பொழுதுபோக்குக்காகவும் இருந்தது. கல்விசார் ஊழியர்கள் மிகவும் ஆதரவளிப்பவர்களாக காணப்படுகின்றமையையும் , கற்றலுக்கான மிகவும் எளிதான இடமாகவும் இந்நிறுவனத்தை நான் குறிப்பிட்டுக் கூற வேண்டும். ஒரு கூடுதல் உதவி அல்லது ஆலோசனை தேவைப்பட்டால் உதவுவதற்கு யாராவது எப்போதும் தயாராய் இருந்தனர். எனது கல்வியை வெற்றிகரமாக முடித்த பின், 2015 ஆம் ஆண்டில் பாராட்டத்தக்க சிறந்த செயல்திறனுக்கான மெரிட் விருது எனக்கு கிடைத்தது.

ஸ்லிட்டில் நான் பெற்ற எனது அனுபவமே என் வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது. வேர்துசா போலாரிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல கலாச்சாரங்களை நான் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் ஸ்லிட் நிறுவனமே எனக்கு உதவியது.

ஸ்லிட்டின் தகவல் தொழிநுட்பப் பட்டக் கற்கையை நான் மிகவும் சிறந்ததென பரிந்துரைக்க விரும்புகின்றேன். இது ஒரு உயர் தர பட்டமாகவும், இதன் பாடநெறி அமைப்பு மற்றும் மிக உயர்ந்த கல்வித் தரநிலைகள் போன்றவையே இதன் சிறப்புக்குரிய காரணங்களாகும். எப்போதும் உங்களின் சில துடிப்பான முடிவுகளே, மிகவும் எதிர்பாராத சில திருப்பங்களை ஏற்படுத்த கூடும்.

மேலும் வாசிக்க

மாணவர் சமூகம்

ஆங்கில மூலை

ஆங்கில அலகின் "ஆங்கில மூலை" எனும் பிரிவானது, ஸ்லிட் கம்பியூட்டிங் மாணவர்களுக்காக 13 வது மாடியில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

உணவு விழா 2016

உணவு விழா 2016 - புகைப்படத் தொகுப்பு

ஸ்லிட் கிரிக்கெட் கொண்டாட்டம் 2016

ஸ்லிட் கிரிக்கெட் கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு