fbpx

வணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி

திறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவம்

உள்வாங்கல்:
ஜனவரி / ஜூன்
கற்கைநெறிக்காலம்:
௦2 வருடம்

க் கற்கைநெறியானது, வணிகத் தொழிற்துறைக்கான ஒரு மேம்பட்ட, பரந்த அடிப்படையிலான கல்வியை வழங்குவதோடு உங்கள் பொது அறிவார்ந்த திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகின்றது. பட்டதாரிகள் உற்பத்தித்துறை, வர்த்தகம் அல்லது பொதுத்துறைகளில் தொழில் வாய்ப்புப் பெறுவதற்குத் தேவையான முறையில் அவர்களைத் தயார்படுத்தவும், மேலும் உயர்வான பதவிப் பொறுப்புகளை நோக்கிச் முன்னேற்றம் அடைவதையும் மிக விரைவில் எதிர்பார்க்க முடியும்.

இது யாருக்கான பாடநெறி?

க் கற்கையின் நிறைவின் பின்னர், வணிகத் துறையின் விளம்பரப்படுத்தல், சந்தைப்படுத்தல், திட்ட முகாமைத்துவம், மனிதவளம் மற்றும் நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் வலுவான தொழில் வாய்ப்புக்களை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் தொழில் முனையும் ஒருவராக, ஒரு தொழிலைத் தொடரக் கூடிய திடமான வணிகத் திறன்களைக் கொண்டிருப்பீர்கள்.

நிறுவனம்

ஸ்லிட் கம்பியூட்டிங் தனியார் நிறுவனமானது ஸ்லிட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டமைக்கான நோக்கமானது, உயர் கல்வியை தொடர விரும்பும் பரந்தளவிலான மாணவர்கள், தொழில்துறை சார்ந்த கற்றல் அனுபவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஸ்லிட் நிறுவனத்தினருடன் இணைந்து ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவனத்தினால் வழங்கப்படும் கற்கைநெறியான தகவல் தொழிநுட்பத்தில் இளமாணிப் பட்டக் கற்கையானது (BSc in Information Technology), மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்பத் துறையின் மேம்பாடுகளின் அறிவினைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கின்றது. கோட்பாடுகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகளின் இணைந்த கல்வியானது, சிறந்த கற்கையறிவுப் பின்னணியை வழங்குவதுடன், தொழில்துறையில் பிரவேசிக்கும் அனைவருக்கும் உகந்த ஒரு சிறந்த முனையாக அமைவதன் மூலம், ஏனையோர் மத்தியிலான ஒரு போட்டியிடும் நன்மையாகவும் அமைகின்றது.

இப்பாடநெறியைத் தெரிவு செய்வதற்கான காரணம் என்ன?

 • இந்தப் பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டமானது ஒரு மாணவர் முறையே 2 வது ஆண்டு மற்றும் 3 வது ஆண்டில் வணிக நிர்வாகத்தில் தேசிய டிப்ளமோ மற்றும் வணிக நிர்வாகத்தில் பட்டமானி போன்ற தகைமைகளைப் பெறுவதன் மூலம் வெளியேறும் விருப்பத் தெரிவுகளை தெரிவு செய்யகூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • இப்பாடநெறி முழுவதிலும், குறிப்பாக இறுதி ஆண்டில், நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தின்படி, பரந்து காணப்படும் கற்கைத் தொகுதிகளை தெரிவு செய்வதன் மூலம் வணிக நிர்வாகத்தில் பட்டமானி தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 • இது உங்கள் தொழில்துறை தேர்வு முறையை எளிதாக அமைப்பதுடன், துறைசார் முதலாளிகள் தேடும் பரந்த அறிவினை அடிப்படையாகவே வழங்குகின்றது.
 • தொழில்முறை வழிகாட்டுதலின் ஆதரவு மற்றும் பயிற்சி, கல்வி, தொழில்முறை மற்றும் நடைமுறை செயற்பாடு அனைத்தையும் ஒருங்கே கற்று, வணிகத் துறையில் சிறக்க உங்களை இன்றே தயார் செய்துகொள்ளுங்கள்.

தொடர்ந்த கற்கைகள்

வணிக நிர்வாகத்தில் பட்டமானிக் கற்கையினை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள், ஒரு வருட பட்டப் பின் படிப்பினைத் தொடர முடியும். வணிகத் துறையில் குறிப்பான முதுமானிப் பட்டக் கற்கைநெறிகளைத் தொடரவும் முடியும். உதாரணமாக: நிதி, மனிதவளம், சந்தைப்படுத்தல். மேலும், துறைசார் நிபுணத்துவக் கற்கைகளான: CMI, CIPD, CIM, ACCA, CIMA, PGCE பிரயோக வணிகம், ஆய்வுக் கற்கைகள் போன்றவற்றையும் தொடர முடியும்.

திறனாய்வுப் பரீட்சை

வணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்குரிய ஆகக்குறைந்த தகைமைகளையுடைய மாணவர்களிடமிருந்து, திறனாய்வுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப் பரீட்சையானது பகுப்பாய்வு, தர்க்கரீதியான மற்றும் கணித திறனாய்வுகளைக் கொண்டமைந்தது. இப்பரீட்சையானது சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நடாத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

 • திறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவத்தினை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஆர்வமுள்ளவர்கள், வணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்களை, நேரடியாக ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
 • விண்ணப்பதாரிகள் அனைவரும் திறனாய்வுப் பரீட்சை மற்றும் செயற்பாட்டுக் கட்டணமாக ரூ.1,௦௦௦/- இனை செலுத்துதல் வேண்டும்.
 • இக்கட்டணமானது, “SLIIT Computing (Pvt) Ltd” எனும் பெயருக்கு, இலங்கை வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் நடைமுறைக் கணக்கு இலக்கம்: 1630619 இற்கு அல்லது, சம்பத் வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் கணக்கு இலக்கம்: 013410001688 இற்குச் செலுத்தப்படல் வேண்டும்.

 

மாணவர் விவகார மற்றும் அனுமதிகள் தொடர்பான பிரிவு,

ஸ்லிட் கம்பியூடிங் (தனியார்) நிறுவனம்,

13ம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல. 28, பரி. மைக்கல் வீதி,

கொழும்பு ௦3.

துரித தொலைபேசி இலக்கம்: 0772 66 55 55

தொலைபேசி இலக்கம்: 0117 54 3600

 

பாடநெறி உள்ளடக்கம்

அடிப்படைக் கற்கைநெறிகள்

 • அடிப்படைக் கணிதத் திறன்கள்
 • ஆங்கிலத்தில் தொடர்பாடும் திறன்கள்

1ம் வருடம் – 1ம் தவணை

 • நுண்பொருளியல்
 • முகாமைத்துவக் கொள்கைகள்
 • கணக்கியலின் அடிப்படைகள்
 • நிரலாக்க நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள்
 • வணிக ஆங்கிலம் மற்றும் தொடர்பு திறன்கள்

1ம் வருடம் 2ம் தவணை

 • மனித வள முகாமைத்துவம்
 • சந்தைப்படுத்தல் கொள்கைகள்
 • வணிகச் சட்டம்
 • வணிகத்திற்கான கணிதம்
 • வணிகத் தகவல் அமைப்புக்கள்
 • தொழிநுட்பத் தொடர்பாடல்

2ம் வருடம் 1ம் தவணை

 • தீர்மானங்களுக்கான அளவீட்டு முறைகள்
 • நிறுவனங்கள் மற்றும் நடத்தை
 • முகாமைத்துவக் கணக்கியல்
 • வணிக உத்தி
 • பருப்பொருளியல் (பருவினப்பொருளியல்)

2ம் வருடம் 2ம் தவணை

 • தர முகாமைத்துவ அறிமுகம்
 • அமைப்புப் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு
 • நிதி அறிக்கை
 • வணிக திட்டம்
 • நிர்வாகவியல் பொருளியல்
 • தொழில்சார் நிபுணத்துவ நடைமுறைகள்

இப் பாடநெறிக்கான குறித்தளவு வெற்றிடங்களே காணப்படுவதனால், உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள இப்போதே விண்ணப்பியுங்கள்.

இன்றே விண்ணப்பியுங்கள்