fbpx

பேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்

உள்வாங்கல்:
ஜனவரி பெப்ரவரி / செப்டெம்பர் ஒக்டோபர்
கற்கைநெறிக்காலம்:
௦1 வருடம்

பெட்போட்ஷியர் பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்விப் பிரிவானது, உண்மையான வணிகப் பயிற்சி, கல்வியியல் ஆய்வு மற்றும் ஆக்கபூர்வமான கற்பித்தல் முறையினைக் கொண்டு மிகவும் தனித்துவமாக அமைந்துள்ளது. பயிற்சி என்பது இதன் மிகவும் முக்கியத்துவமானதகக் காணப்படுகின்றது. கோட்பாட்டுக் கல்வி மட்டுமன்றி குறித்த துறையின் சகல விதமான நடவடிக்கைகளுக்கும், எவ்வாறு கோட்பாட்டுக் கல்வியும், நடைமுறைப் பயிற்சியும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டுள்ளது என்பதனையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

நிறுவனம்

பெட்போர்ட்ஷியர் பல்கலைக்கழகம் என்பது ஒரு நவீன, புதுமையான பல்கலைக்கழகமாகும். இது 100 ஆண்டுகளுக்கு மேலாக உயர் தரமான கல்வியின் பாரம்பரியத்தை கொண்டது. இப் பல்கலைக்கழகமானது தனது மாணவர்களை நன்கு கற்றவர்களாகவும், தொழில் புரியும் மற்றும் தொழில்முனையும் உலகளாவிய குடிமக்களாக வளரச் செய்கின்றது. அத்துடன் இப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கி, கல்வி மீதான அவர்களது ஆர்வத்தினை தூண்டுவதற்கான ஊக்குவிப்பினையும் வழங்கி வருகின்றது.

 

பெட்போர்ட்ஷியர் பல்கலைக்கழகத்தில் கற்றல்

 • நூற்றுக்கும் மேலான நாடுகளைச் சார்ந்த 24,000 இற்கும் அதிகமான மாணவர்கள்
 • சர்வதேச மற்றும் பல்-கலாசார கற்கும் சமூகங்கள்
 • சீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கல்விப் பங்காளர்கள்
 • சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் கோடை காலப் பள்ளிகளில் கற்பதற்கான வாய்ப்புகள்

 

கடந்த ஆண்டில் பட்டம் பெற்ற 92% பெட்போர்ட்ஷியர் மாணவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்று அல்லது உயர் கல்வியைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தினால் அடையப்பெற்ற மிக உயர்ந்த எண்ணிக்கை இதுவாகும் (உயர்கல்வி கவுன்சிலர்களின் (DLHE) 2013 கணக்கெடுப்பின்படி குறிப்பிடப்பட்டது).

(DLHE) 2013 அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, பெட்போர்ட்ஷியர் மாணவர்களில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவர்கள், தற்போது பட்டதாரி மட்ட வேலைவாய்ப்பில் உள்ளனர். நிபுணத்துவ மற்றும் நிர்வாக ரீதியான பதவிகள் 8% இற்கு மேலாகவும், 73.5% அளவிற்கும் அதிகரித்துள்ளது.

அனுமதித் தகைமைகள்

 • HND / Advanced Diploma அல்லது அவற்றுக்கு ஈடான தகைமைகள்.
 • SLIIT / NIBM / NSBM / ICBT / ACBT / APIIT ஆகியவற்றின் 2 ஆண்டுகள் பூர்த்தி செய்திருத்தல்.
 • CIM / CIMA முகாமையாளர் மட்டம்

பாடநெறிக்காலம்

மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வார நாட்களில் அல்லது வார இறுதி நாட்களில், ஒரு வருட காலத்திற்கு நடைபெறும்.

பாடநெறி அமைப்பு

இப்பாடநெறியானது நவீன மற்றும் சமகால வேலைத்தளங்களில் எவ்வாறு முகாமைத்துவக் கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பான விடயங்களைக் கற்பிப்பதாகும். கோட்பாட்டுக் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கக்கூடிய வாய்ப்பினை இப்பாடநெறி பெற்றுத் தருகின்றது.

வணிக நிர்வாக இளமானி – BA (Hons)

 • சமகால சூழலில் சந்தைப்படுத்தல்
 • வணிகத்திலான புதிய முன்னேற்றங்கள்
 • மூலோபாய முகாமைத்துவம்
 • செயற்பாட்டு முகாமைத்துவம்
 • திட்ட முகாமைத்துவம்

தொடர்ந்த கற்கைகள்

இப்பாடநெறியினைப் பூர்த்தி செய்யும் மாணவர்கள் ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவனத்தினால் நடாத்தப்படும் கீல் பல்கலைக்கழகத்தின் ஒரு வருடப் பாடநெறியான திட்ட முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டக் கல்வியினைத் (MSc in Project Management) தொடர முடியும். அல்லது, வணிகம், மனிதவளம் மற்றும் சந்தைப்படுத்தல் சார்ந்த முதுமானிக் கற்கைகள் மற்றும் உதாரணமாக CMI, CIPD, CIM, ACCA, CIMA, PGCE போன்ற துறைசார் கற்கைகளையும் மேற்கொள்ள முடியும்.

பாடநெறிக்கட்டணம்

உள்ளூர் கட்டணம்: TBC
பல்கலைக்கழகக் கட்டணம்: GBP 700 (2017 உள்வாங்கல்)
** கட்டணம் செலுத்தவேண்டிய கடைசித் திகதி பற்றி, கல்வி விவகார பிரிவினரால் அறிவுறுத்தப்படும்.

அடுத்த கட்டம் – தொழில் வாய்ப்புக்கள்

பட்டதாரிகள் நிதி, மனிதவளம், சந்தைப்படுத்தல் போன்ற வணிகத் துறையின் பல பிரிவுகளிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பலர் பாரிய பல்தேசிய நிறுவனங்களில் கடமை புரிந்தாலும், காலப்போக்கில் பல செயல்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்புக்களுக்காக சிறிய நிறுவனங்களை நாடிச் செல்கின்றனர். சிலர் தொண்டு நிறுவனங்களிலும் பணியாற்றவும், ஏனையோர் தமது துறையாக கற்பித்தலையும் தெரிந்துகொள்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை

பாடநெறியைத் தொடர விரும்புபவர்கள், முறையான சுய விபரக் கோவையுடன், கல்வி சார் ஆவணங்களையும் இணைத்து, computing@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். மேலதிக விபரங்களுக்கு 0773550660, 0777636067 or 0117543600 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

இப் பாடநெறிக்கான குறித்தளவு வெற்றிடங்களே காணப்படுவதனால், உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள இப்போதே விண்ணப்பியுங்கள்.

இன்றே விண்ணப்பியுங்கள்