fbpx

பேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்

உள்வாங்கல்:
ஜனவரி பெப்ரவரி / செப்டெம்பர் ஒக்டோபர்
கற்கைநெறிக்காலம்:
௦1 வருடம்

ணினி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் ஆகியன, இன்றைய வர்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளிலான வெற்றிகளின் மையமாக காணப்படுகின்றன. பட்ட மேல் இணைப்புக் கற்கையாக அமையும் இக்கற்கை நெறியானது, மூன்றாம் கட்ட சிறப்பு ஆய்வுக் கற்கைக்கான வாய்ப்பினை வழங்குகின்றது. முழுமையான மென்பொருள் அபிவிருத்தி முறைச் சுழற்சியையும், பொருள்-சார் முறைகளைப் பயன்படுத்தி உயர்தர அமைப்புகளின் உற்பத்தியைப் பற்றியும், குறிப்பாகக் கற்கும் வாய்ப்பினையும் வழங்குகின்றது.

நிறுவனம்

பெட்போர்ட்ஷியர் பல்கலைக்கழகம் என்பது ஒரு நவீன, புதுமையான பல்கலைக்கழகமாகும். இது 100 ஆண்டுகளுக்கு மேலாக உயர் தரமான கல்வியின் பாரம்பரியத்தை கொண்டது. இப் பல்கலைக்கழகமானது தனது மாணவர்களை நன்கு கற்றவர்களாகவும், தொழில் புரியும் மற்றும் தொழில்முனையும் உலகளாவிய குடிமக்களாக வளரச் செய்கின்றது. அத்துடன் இப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கி, கல்வி மீதான அவர்களது ஆர்வத்தினை தூண்டுவதற்கான ஊக்குவிப்பினையும் வழங்கி வருகின்றது.

 

பெட்போர்ட்ஷியர் பல்கலைக்கழகத்தில் கற்றல்

  • நூற்றுக்கும் மேலான நாடுகளைச் சார்ந்த 24,000 இற்கும் அதிகமான மாணவர்கள்
  • சர்வதேச மற்றும் பல்-கலாசார கற்கும் சமூகங்கள்
  • சீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கல்விப் பங்காளர்கள்
  • சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் கோடை காலப் பள்ளிகளில் கற்பதற்கான வாய்ப்புகள்

 

கடந்த ஆண்டில் பட்டம் பெற்ற 92% பெட்போர்ட்ஷியர் மாணவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்று அல்லது உயர் கல்வியைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தினால் அடையப்பெற்ற மிக உயர்ந்த எண்ணிக்கை இதுவாகும் (உயர்கல்வி கவுன்சிலர்களின் (DLHE) 2013 கணக்கெடுப்பின்படி குறிப்பிடப்பட்டது).

(DLHE) 2013 அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, பெட்போர்ட்ஷியர் மாணவர்களில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவர்கள், தற்போது பட்டதாரி மட்ட வேலைவாய்ப்பில் உள்ளனர். நிபுணத்துவ மற்றும் நிர்வாக ரீதியான பதவிகள் 8% இற்கு மேலாகவும், 73.5% அளவிற்கும் அதிகரித்துள்ளது.

அனுமதித் தகைமைகள்

  • HND / Advanced Diploma அல்லது அவற்றுக்கு ஈடான தகைமைகள்.
  • SLIIT / NIBM / NSBM / ICBT / ACBT / APIIT ஆகியவற்றின் 2 ஆண்டுகள் பூர்த்தி செய்திருத்தல்.

பாடநெறிக்காலம்

மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வார நாட்களில் அல்லது வார இறுதி நாட்களில், ஒரு வருட காலத்திற்கு நடைபெறும்.

பாடநெறி அமைப்பு

இணைய நிரலாக்கம், தரவுத்தள பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிணைப்பியல் போன்ற பகுதிகள் பற்றிய விரிவான அறிவைப் பெறுவீர்கள். மேலும் இறுதி கட்ட திட்ட ஆய்வின் முடிவின் பின்னர், மேலும் தொடர்ந்த மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பினையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

  • சமூக மற்றும் நிபுணத்துவ திட்ட முகாமைத்துவம்
  • பட்டதாரி திட்டம்
  • ஆராய்ச்சி முறைகள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்
  • ஒப்பீட்டு ஒருங்கிணைந்த அமைப்புகள்

தொடர்ந்த கற்கைகள்

மென்பொருள் பொறியியல் முதுமானி அல்லது அத்துடன் தொடர்பான முதுமானிப் பட்டக் கற்கை (MSc) மற்றும் ஆய்வியல் நிபுணர் / கலாநிதிப் (MPhil / PhD) பட்டக் கற்கைகள்

பாடநெறிக்கட்டணம்

உள்ளூர் கட்டணம்: TBC
பல்கலைக்கழகக் கட்டணம்: GBP 700 (2016/2017 உள்வாங்கல்)
கட்டணம் செலுத்தவேண்டிய கடைசித் திகதி பற்றி, கல்வி விவகார பிரிவினரால் அறிவுறுத்தப்படும்.

அடுத்த கட்டம் – தொழில் வாய்ப்புக்கள்

தொழில்துறை வழிமுறைகள்: இவ் இணைந்த கற்கைநெறியினை கற்ற பட்டதாரிகள், திறமையான மென்பொருள் பொறியியல் தொழில்நுட்பம், பயிற்சி கணினி நிரலாக்குநர் / மென்பொருள் மேம்பாட்டாளர் போன்ற பல தொழில் வாய்ப்புகளை நிறைவேற்றுபவர்களாக அமைய வேண்டிய நிலைமை காணப்படுவதனைக் கருத்திற் கொண்டு, மூலோபாய முறையில் திட்டமிட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இக் கற்கைநெறி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், பயிற்சி பெறும் திறனுடைய பயிலுனர் மட்டத்திலான தொழில் வாய்ப்புக்களில் அமர்த்தப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து குழு மட்ட அபிவிருத்தி மற்றும் ஆதரவு வழங்கும், சிறிய மற்றும் பாரிய அளவுகளிலான உற்பத்தி மற்றும் வர்த்தக அமைப்புக்களில் மேற்பார்வையிடல் பொறுப்புணர்வு பதவிகளுக்கு உயர்வடைய இக் கற்கைநெறி வழிவகுக்கும்.
இக்கற்கை வழிமுறையின் குறிக்கோளானது, பட்டதாரிகளானவர்கள், வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், நடைமுறை கட்டுப்பாட்டுக்குள் பொருந்தும், தரமான மென்பொருள் கலைக்கூடங்களை உருவாக்க தேவையான, தமது அறிவார்ந்த மற்றும் நடைமுறை திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுவதாகும்.
வெளிப்புற மற்றும் உள் தர நிலைகளின் பங்கு முக்கியமானது என வலியுறுத்தப்படுகிறது. அதேபோல், அத்தகைய தலைப்புகள் பட்டதாரிகளை உயர் மட்டத்திற்குத் தொடரவும் அல்லது ஆராய்ச்சி அல்லது கல்வி அமைப்பில் திறம்பட பங்கேற்கவும் உதவும்.
இணைந்த கற்கையின் ஒரு முக்கிய விடயம் எதுவெனில், முழுமையான மென்பொருள் தயாரிப்பு முறைச் சுழற்சி பற்றிய அறிவானது, கல்வி ரீதியாகவும் மற்றும் தொழிற்துறை ரீதியாகவும் முழுமையாக உள்ளடக்கியுள்ளது.
அண்மைக்காலப் பட்டதாரிகள், உற்பத்தித்துறை மற்றும் பொதுத் தொழில் துறைகளில் பட்டதாரிப் மட்டப் பதவிகளைப் பெற்றுள்ளதுடன், தொழில் வாய்ப்புச் சந்தையில் நிலவும் மிகுந்த போட்டிகளின் மத்தியிலும், தமக்குரிய மேலும் தொடர்ந்த பதவியுயர்வுகளைப் பெறும் தகுதிகளைப் பெற்றுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

பாடநெறியைத் தொடர விரும்புபவர்கள், முறையான சுய விபரக் கோவையுடன், கல்வி சார் ஆவணங்களையும் இணைத்து, computing@sliit.lkஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். மேலதிக விபரங்களுக்கு 0773550660, 0777636067 or 0117543600 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

இப் பாடநெறிக்கான குறித்தளவு வெற்றிடங்களே காணப்படுவதனால், உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள இப்போதே விண்ணப்பியுங்கள்.

இன்றே விண்ணப்பியுங்கள்