ஸ்லிட்

ஸ்லிட் என்பது, பல்கலைக்கழக சட்டமூலத்திற்கமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட, பட்டமளிப்பில் முன்னணி வகிக்கும் ஒரு நிறுவனமாகும். ஸ்லிட் நிறுவனம் பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் சங்கத்திலும் (ACU), சர்வதேச பல்கலைக்கழகங்கள் சங்கத்திலும் (IAU).அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்லிட் நிறுவனத்தின் உயர் தரத்திலான கற்கை நெறிகள் காரணமாக, ஸ்லிட் பட்டதாரிகள் சர்வதேச ரீதியில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். ஸ்லிட் நிறுவனமானது சிறந்த வளங்களைப் பயன்படுத்தி, கற்றல் மற்றும் ஆய்வுகளுக்கான சூழலை வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கான சிறந்த சேவையை வழங்கி வருகின்றது. மாணவர்களை சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும், உயரிய நிலையை அடைவதற்கான அர்ப்பணிப்புடனும் கூடியவர்களாவதற்கான ஊக்குவிப்பை வழங்குவதுடன், தமது பட்டதாரிகள் அனைவரும் உறுதியான பகுப்பாய்வு, பிரச்சினை தீர்த்தல் மற்றும் தொடர்பாடல் திறன் போன்றவற்றைக் கொண்டவர்களாக உருவாக்கப்படல் வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்லிட் கம்பியூட்டிங்

ஸ்லிட் கம்பியூட்டிங் தனியார் நிறுவனமானது ஸ்லிட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டமைக்கான நோக்கமானது, உயர் கல்வியை தொடர விரும்பும் பரந்தளவிலான மாணவர்கள், தொழில்துறை சார்ந்த கற்றல் அனுபவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஸ்லிட் நிறுவனத்தினருடன் இணைந்து ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவனத்தினால் வழங்கப்படும் கற்கைநெறியான தகவல் தொழிநுட்பத்தில் இளமாணிப் பட்டக் கற்கையானது (BSc in Information Technology), மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்பத் துறையின் மேம்பாடுகளின் அறிவினைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கின்றது. கோட்பாடுகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகளின் இணைந்த கல்வியானது, சிறந்த கற்கையறிவுப் பின்னணியை வழங்குவதுடன், தொழில்துறையில் பிரவேசிக்கும் அனைவருக்கும் உகந்த ஒரு சிறந்த முனையாக அமைவதன் மூலம், ஏனையோர் மத்தியிலான ஒரு போட்டியிடும் நன்மையாகவும் அமைகின்றது.

நாம் பெறுமதியாகக் கருதுபவை எவை?

சிறப்புத்தன்மை

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறல்

அறிவு

கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல்

ஸ்லிட் கம்பியூட்டிங் என்பது எதற்காக?

கடந்த தசாப்தத்தில், ஸ்லிட் கம்பியூட்டிங் நிறுவானமானது ஸ்லிட் (SLIIT) நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் முன்னணி வகிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அமைந்து, மாண்புமிக்க அர்ப்பணிப்புடன் தேசத்திற்கும் தேசத்திற்கு அப்பாலும் சென்று தனது சேவையை ஆற்றி வருகின்றது.

எமது கடமை

நிகழ்கால சவால்களை எதிர்கொள்வதற்கான அறிவினைப் பாதுகாப்புடன் பரிமாற்றம் செய்வதன் மூலம், எதிர்காலத்தினை சிறப்பாக வடிவமைத்துக் கொள்ளத் தேவையானத் தீர்வுகளுக்கான பங்களிப்பினை வழங்குவதாகும்.

எமது நோக்கம்

தகவல்களை, அறிவு மற்றும் விவேகமாகப் பரிமாற்றம் செய்வதாகும்.

எமது பணி

சமூகத்திற்குப் பணியாற்றவும், தேசத்தினை வழிநடாத்தவும் கூடிய, அதி சிறந்த தொழில்துறை வல்லுனர்களை உருவாக்கும் ஒரு புகழ் பெற்ற நிறுவனமாக அமைவதாகும்.